கடந்த 10ம் திகதி கட்டாரில் தொழில் புரியும் முகம்மட் பர்சான் பஸ்தீன் என்னும் இலங்கைச் சகோதரரின் பணப்பை கட்டாரில் தொலைந்து போனது.
இவரது பணப்பையினுள் கட்டார் சாரதி அனுமதிப்பத்திரம், பணம், உட்பட பல ஆவணங்கள் இருந்தன.
இப்பணப்பையை கண்டெடுத்த ஜே.எம்.இர்சாத் என்னும் சகோதரர் சமுக வலைத்தளத்தினூடாக இத்தகவலை பரிமாறியிருந்தார்.
இச்செய்தியை சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையம் 10ம் திகதி பிரசுரம் செய்திருந்தது.
இலங்கைச் சகோதரரின் பணப்பை கட்டாரில் கண்டுபிடிப்பு: இச்செய்தியை செயார் செய்து உதவுங்கள் என்ற தலைப்பில் செய்தியிட்டிருந்தோம்.
இச்செய்தியானது முகநூல் ஊடாக சுமார் 75ஆயிரம் பேர்களை அடைந்திருந்ததுடன் 2009பேர் இச்செய்தியை சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் பிரத்தியேக முகநூல் வாயிலாக செயார் செய்திருந்தனர்.
இதன் நிமிர்த்தம் நேற்று பணப்பையை தொலைத்த சகோதரர் பணப்பையை கண்டெடுத்த சகோதரருடன் தொலைபேசியில் உரையாடி, சந்தித்து தனது பணப்பையையும் ஆவணங்களையும் பெற்றுச் சென்றுள்ளார்.
குறித்த பணப்பையை கண்டெடுத்த சகோதரர் சமுக ஊடகத்தின் வலிமைக்கு நன்றி செலுத்தி தனது முகநூலில் பதிவொன்றினை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்மால் பிரசுரம் செய்யப்பட்ட செய்தி கீழ் இணைக்கப்பட்டுள்ளது
இலங்கை சகோதரரின் பணப்பை கட்டாரில் கண்டுபிடிப்பு; செய்தியை share செய்து உதவுங்கள் (Photo)
The post சிறிலங்கா முஸ்லிம்ஸ் செய்திக்கு பலன்: கட்டாரில் தொலைந்துபோன பணப்பை மீண்டும் கிடைத்தது! appeared first on Sri Lanka Muslim.