Quantcast
Channel: கட்டார் – Sri Lanka Muslim
Viewing all articles
Browse latest Browse all 101

பெண் காதி

$
0
0

Riyas Qurana


இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு கால எல்லைக்குப் பிறகு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர் திருத்தங்களைக் கொண்டுவரும் ஒரு ஏற்பாடு, சுமார் ஒன்பது வருடங்களாகப் பரீசீலிக்கப்பட்டு, நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

அதையொட்டி, முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பான விவாதங்களும், கருத்து முன்வைப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பிரதானமான காரணம், சீர்திருத்தத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழு இரண்டாகப் பிரிந்து, இரண்டு முன்மொழிவுகளை செய்ததே.

அதன் உச்சக் கட்டமாகவும்,பலமான எதிர்ப்பாகவும் ஜம்மியதுல் உலமா சபை ஒரு பக்கம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. அந்த அமைப்பு இருதரப்பு முன்மொழிவுகளையும் கூறி மக்களின் அபிப்பிராயங்களை அறிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நியாயமான நடைமுறைக்கு மாற்றமாக, தாங்கள் ஆதரிக்கும் அல்லது முன்வைத்திருக்கும் அறிக்கையை மட்டுமே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் நயவஞ்சகத்தனமான ஒரு வழிமுறையைக் கையாள்கிறது.

அதுவும், தமது முன்மொழிவுகளைக் கூட மக்களிடம் விளங்கப்படுத்துவதற்குப் பதிலாக, மறு அணியினர் ஷரியாவுக்கு முரணாக முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற அவதுாறுகளையும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையின் முஸ்லிம் பத்திரிகையான மீள்பார்வை அண்மையில், சீர்திருத்தத்தை ஆதரிக்கும் திசையில் ஒரு மென்மையான கருத்தை முன்வைத்திருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, விடிவெள்ளி, அதாகப்பட்டது, முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்தும் வீரகேசரிக் குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகை, இருதரப்பு கருத்துக்களையும் பதிவு செய்திருந்தது.

சிறி லங்கா முஸ்லிம், ஜப்னா முஸ்லிம் போன்ற இணையப் பத்திரிகைகளும் தமது தளங்களில் இது குறித்து இருதரப்புக்களையும் ஆதரிக்கும் பலருடைய கட்டுரைகளை பிரசுரித்திருந்தன.

இதற்கு அப்பால், பெண்கள் அமைப்புக்கள் தங்களுக்குள் ஒன்று கூடி சீர்திருத்தம் அவசியமானது என்ற தங்கள் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.

உஸ்தாத் மன்சூர், சீர் திருத்தத்தை ஆதரித்து ஒரு வீடியோ பகிர்வைச் செய்திருக்கிறார். கலாநிதி அஸ்ரப் அகமத், கலாநிதி அனஸ், அறிஞரும் எழுத்தாளருமான ஏபிஎம் இத்ரீஸ் – சமூக வலைத்தள எழுத்தாளர்கள் என பலரும் சீர்திருத்தத்தை ஆதரித்து தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

உலமா சபையை நெருக்கமாக கொண்ட ஆலிம்கள், மற்றும் வஹாபியவாதிகள் சிலரும் சீர்திருத்தத்தை எதிர்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

இதில் பெண்காதியை நியமிக்க இஸ்லாத்தில் இடமில்லை என்ற வாதங்கள் பெருமளவு முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஆதரித்தும் பெருமளவு கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கின்றன.

எதிர்ப்பவர்கள் 4- 34 வது குர்ஆன் வசனத்தை ஆதாரமாக சுட்டி பெண்கள் காதி நீதிபதிகளாக வரமுடியாது என்று கூறியதையும் கடந்து, ஆண்களை நிருவாகிக்க கூடிய எந்த பதவிகளையும் பெண்கள் வகிக்க முடியாது என்பதுவரை இறுக்கமாக கருத்துக்களை ஒரு ஸலபி சிறிலங்கா முஸ்லிம் தளத்தில் முன்வைத்திருந்தார்.

அதேபோல, ஜம்மியதுல் உலமா சபையின் கொழும்புக் கிளைக்கு செயலாளராக இருக்கும் ஒரு ஆலிமும், விடிவெள்ளி பத்திரிகையில், நான்கு மதஹபுகளும் பெண் காதியை நியமிப்பதை மறுப்பதாகவும், அபூ ஹனிபா பெண் காதியை ஏற்பது, பொருள் சம்பந்தமான விசயங்களில் மட்டுமே என கூறுவதுடன்,

பெண்காதிகளை நியமிக்க ஆதரவு தெரிவிக்கும் இஸ்லாமிய அறிஞர்களான இமாம் பத்தி, இமாம் சுப்ருமா போன்றவர்களின் கருத்து ஷரிஆ சட்டவாக்கத்தில் பலவீனமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நிற்க, இஸ்லாமிய வரலாற்றில் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் என்பது குறித்து கருத்து முரண்பாடுகள் இருந்துவருவதாக கூறப்படுகின்றது. கருத்து முரண்பாடுகளை ஏற்க வேண்டும் என்ற ஒரு புரிதல் இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே என அறிய முடிகிறது. பல கருத்து முரண்பாடுகள் பல விசயங்களை முன்வைத்து இன்றும் நிலவுகிறது என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.

வரலாற்றில் இந்த முஸ்லிம் பெண் அரசியல் தலைமைத்துவம் என்ற விசயம் பெரும் பரபரப்பாக உலகுதழுவிய அளவில் விவாதிக்கப்பட்ட தருணம் ஒன்றை, பெண் அறிஞர் ஃபாத்திமா மெர்நிஸி தனது புத்தகமொன்றில் சுட்டிக்காட்டுகிறார்.

1988ம் ஆண்டு பாகிஸ்தானில் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் பெண் அந்த நாட்டு தலைமைப் பொறுப்பிற்கு தெரிவு செய்யபட்டபோதுதான், பெரும் சலசலப்பும், விவாதங்களும் உலகு தழுவிய நிலையில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் எழுந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானிலுள்ள அறிஞர்கள் மத்தியிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த போதிலும், அங்கு இருந்த ஆண் பெண் இரு பகுதியினரும் ஒரு பெண்ணை தமது நாட்டுக்கு தலைமை தாங்க ஆதரவளித்தார்கள் என்பது முக்கியமான ஒன்று.

”அரசுத் தலைமை உட்பட பொதுத் துறையின் உயர்பதவியை வகிப்பதற்கான பெண்களின் உரிமை, 1989 ஜனவரி முதல் ஒரு முக்கியமான மதத் தலைவரால் ஆதரிக்கப்படுவதாகும். இவர் இச் சர்ச்சையில் குதித்துள்ள ஒரு சாதாரண ஆலிம் அல்ல, கெய்ரோவின் மதிப்புயர்ந்த அல் – அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் புலமையாளரான மதிப்புக்குரிய ஷெய்க் கஸ்ஸாலி அவர்களேயாவார்.

இவர்தான் தனது தகர்த்தெறியும் தன்மை வாய்ந்த அஸ் சுன்னா அன் நபவ்லியா (நபி ஸல்) அவர்களின் வழிமுறைகள்)’ என்ற நூலின் மூலம் முஸ்லிம் உலகில் உறங்கிக் கிடந்த பழமை வாதத்தைத் தகர்த்தெறிந்தார்.””
என பாத்திமா மெர்நிஸி சுட்டிக்காட்டுவார்.

ஆக, பெண்களின் தலைமைத்துவம் தொடர்பிலான சர்ச்சையில் ஆதாரங்களாக, முஸ்லிம்கள் முதல் நிலை ஆதாரமாக கருதும் குர்ஆன் வசனம் ஒன்றும், இரண்டாம் நிலை ஆதாரமாகக் கருதும் ஹதீத் ஒன்றும் தொடர்பு படுகிறது. அதையே பெண்களுக்கான தலைமைத்துவத்தை மறுக்கும் அணியினர் கருத்திற் கொள்கின்றனர்.

ஆனால், பெனாஸிர் பூட்டோ நாட்டு தலைவராக ஆனபோது, எழுந்த சர்ச்சையின் போது, இரண்டாம் நிலை ஆதாரமே பரவலாக பேசுபொருளானது.
அந்த ஹதீஸை (புஹாரி – 4425 ) முன்வைத்து எழுதியவர்களுக்கு மறுப்பை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார்.
அதே நேரம், சூரா நம்ல் இல் வரும் ஒரு சம்பவத்தை முன்வைத்து, பெண்கள் அரசியலில் தலைமை கொடுக்க முடியும் என்றும் விவாதித்திருந்தார்கள்.
சபா நாட்டு அரசி – பல்கீஸ் அவர்கள் குறித்த சம்பவம்.

ஒரு பெண் அரசாட்சி செய்வதை இறைவன் ஏற்பதாக நடைபெறும் ஒரு சம்பவம் அது. ஆனால், இலங்கையில் பெண்களின் தலைமைத்துவத்தை மறுப்பவர்கள் சுட்டிக்காட்டும் குர்ஆன் வசனம் 4 – 34 ஆகும்.

4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்.
(ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினால்,
ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இந்த வசனத்தில் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். என அறிவிக்கிறான். சிலரை சிலரைவிட என்பதற்கு பெண்களைவிட ஆண்களை மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான் என்று பொருளல்ல.

அதே நேரம் சிலரை சிலரைவிட உயர்த்துவது என்பது ஒரு தகுதி என்ற அடிப்படையிலும் குர்ஆன் குறிப்பிடவில்லை. சிலரைவிட சிலரை உயர்த்துவது வேறு காரணங்களுக்காவும் உண்டு என்பதை குர்ஆன் கூறுகிறது.

6:165. அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான்.
0 ஆகவே அது தகுதியல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

00000
சொத்துக்களிலிருந்து குடும்பத்திற்கு செலவு செய்பவர் என்பதனால், நிர்வகிக்கும் நிலையை பரிந்துரைக்கப்படுகிறது. இது பொருளாதார விசயத்தோடு கூடிய பெண்ணின் பங்களிப்பை நிருவகித்தல் என்பதை சுட்டுகிறது.

குடும்பத்திற்கு செலவழிப்பவருக்கு அந்தக் குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் நிருவாகம் வழங்கப்படுகிறது.
பெண் குடும்பத்திற்கு செலவழித்தால், பொருளாதார நிருவாகம் பெண்ணுக்கு. சிலரை விட சிலரை மட்டுமே மேன்மைப்படுத்தியிருப்பதாக குர் ஆன் கூறுதிறதே தவிர, எல்லாப் பெண்களையும் விட எல்லா ஆண்களையும் மேன்மைப்படுத்தியதாக கூறவில்லை.

ஆகவே, இந்த நிருவகித்தல் என்ற விசயம் பொருளாதாரத்தை தொடர்புபடுத்தி அதைக் கையாளும் இடத்தை ஒருவருக்கு வழங்குகிறது. ஏனெனில், அந்த பொருளாதாரம் அவருடையது. எனவே, அவருடைய பொருளாதாரத்தை வேறு ஒருவர் பயன்படுத்தும்போது, உரியவரின் பொறுப்பை முன்வைக்கிறது.
இதை காரணமாக வைத்து பெண் தலைமைப் பொறுப்பிற்கு வரமுடியாது என்றோ.. ஆண்களை நிருவகிக்கும் எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட முடியாதென்றோ முடிவு செய்துவிட முடியாது.

பதவி, தலைமைத்துவம் தொடர்பில் பெண்கள் என்றோ ஆண்கள் என்றோ தனித்து சொல்லப்படவில்லை. குர்ஆனின் சில வசனங்களை அதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம்.

58-11 – . ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.

0 இந்த வசனம் ஈமான் கொண்டவர்களே என்றே விளிக்கிறது. இதில் ஆண்களும் பெண்களும் உள்ளடங்கப்படுகிறார்கள். கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கு பதவியை உயர்த்துவான்.
ஆண் பெண் யாராக இருந்தாலும் கல்வி ஞானம் இருந்தால் அவ்விதம் உயர்வு கிடைக்கும்.

12:76. நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்;
0 ஆண்களுக்கு என்று கூறப்படவில்லை. நாடியவர்களுக்கு என்றே குறிப்பிடப்படுகிறது. அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.

எனவே, பெண்கள் அரசியல் தலைமைத்துவமோ அல்லது வேறு பதவிகளிலோ இருப்பதற்கு எந்தத் தடைகளுமில்லை. அவர்கள் இறை நம்பிக்கையோடும், சிறந்த முறையில், நீதியான முறையில், இறைவனுக்கு விருப்பமான முறையில் தமது பதவியை வகிப்பது மட்டுமே முக்கியமானது.

16

The post பெண் காதி appeared first on Sri Lanka Muslim.


Viewing all articles
Browse latest Browse all 101

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!