கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்
கட்டாரில் இடம் பெற்ற தீ விபத்தொன்றில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கட்டார் உள்துறை அமைச்சு உறுதிபடுத்தி இருக்கின்றது.
சல்வா சுற்றுலா திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலேயே மேற்படி 11 பேர் பலியானதுடன்,12 பேர் காயமடைந்துள்ளனர்.
பலியானவர்களுள் அதிகமானோர் தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என கட்டார் உள்துறை அமைச்சு பொதுவாக கூறியிருந்தாலும்,பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இது வரை அறிவிக்கவில்லை.
பலியானவர்களின் சடலங்கள் அபு ஸம்ரா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டார் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
The post கட்டாரில் இடம் பெற்ற தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் பலி appeared first on Sri Lanka Muslim.