Quantcast
Channel: கட்டார் – Sri Lanka Muslim
Viewing all articles
Browse latest Browse all 101

Sri Lankan Community Development Forum – Qatar உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பு

$
0
0

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

பல வருடங்களாக கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கும், இலங்கை நாட்டில் ஏற்படுகின்ற அவசரகால நிலைமைகளின் போதும் பல வகையான உதவிகளையும் பல வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்திய CWF என அழைக்கப்பட்ட Sri Lankan Community Welfare Forum – Qatar உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு Sri Lankan Community Development Forum Qatar (CDF QATAR) என்ற அமைப்பு உத்தியோகபூர்வமாக 21.11.2017 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

CWF அமைப்பினால் நடைமுறைப்படுத்திய அனைத்து திட்டங்களையும் உதவிகளையும் ஒத்தாசைகளையும், இலங்கை வாழ் கத்தார் சகோதரர்களுக்கு CDF எனும் அமைப்பு தொடர்ந்தும் ஏற்பாடு செய்து வழங்கும் என இத்தால் உறுதியளிக்கின்றோம்.

இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களாவன:

· இலங்கையில் இருந்து புதிதாக கத்தாருக்கு வரும் குடும்பங்கள் மற்றும் தனிமனிதர்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தல்.

· தொழில்வாய்ப்புகள் சம்பந்தமான தரவுகளை, தொழில் தேடுபவர்களுக்கு சென்றடையச் செய்தல்.

· ஜனாஸா அறிவித்தல்களை உரிய முறையில் பகிர்வதுடன், ஜனாஸா சம்பந்தப்பட்ட விடயங்களை கத்தார் நாட்டின் சட்ட ஒழுங்கிற்கு ஏற்ப கையாளுதல்.

· அரசாங்க அறிவிப்புக்களை உடனுக்குடன் பகிர்தல்.(சட்ட ஒழுங்கு, கால நிலை, போக்குவரத்து)

· கத்தாரில் செயற்படும் சமூகசேவை அமைப்புக்கள், ஊர்வாரியான அமைப்புக்களின் நிகழ்வுகளை பொது ஊடகமாக இருந்து மக்களிடம் கொண்டு செல்லல்.

· நோன்பு கால இப்தார் நிகழ்ச்சிகளை Qatar Charity மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவியுடன் நடாத்துதல்.

· கத்தார் வாழ் இலங்கையரின் பித்ராவினை சேகரித்து தகுதி உடையவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கச் செய்தல்.

· உழ்ஹிய்யா செயற்திட்டத்தை பல ஊர் அமைப்புகளுடன் இணைந்து கத்தாரில் நடைமுறைப்படுத்தல்.

· அனைத்து இலங்கை வாழ் சகோதரர்களையும் நவீன தொடர்பாடலினூடாக (WhatsApp, Facebook, Tweeter) இணைப்பதின் மூலம் அன்றாட, முக்கியமான தகவல்களை பரிமாறிக் கொள்ளல்.

· நாட்டில் ஏற்படும் அனர்த்தங்களின் போது Federation of Sri Lankan Muslim Associations ஊடாக ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து உதவிகளை ஏற்பாடுசெய்தல்.

· இன்னும் பல செயற்திட்டங்கள்.

இவ்வமைப்பின் செயற்திட்டங்களில் இணைத்துக் கொள்ள விருப்பமான சகோதரர்கள் பின்வரும் மொபைல் இலக்கமான +974 66601040 க்கு உங்களது பெயர் மற்றும் ஊரினை Message பண்ணுவதன் ஊடாகவும் எமது பேஸ்புக் பக்கமான https://www.facebook.com/CDFQATAR/ லைக் பண்ணுவதன் ஊடாகவும் இணைந்து கொள்ளலாம்.

உங்களது ஆதரவே எங்களது தொடர்ந்தேர்ச்சியான செயற்பாடுகளுக்கு வெற்றியை கொடுக்கும். எனவே நீங்களும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் செயற்திட்டங்களில் பங்காளிகளாக மாறுங்கள்.

ஜஸாகல்லாஹு ஹைரன்

இவ்வண்ணம்
Executive Committee – CDF Qatar

The post Sri Lankan Community Development Forum – Qatar உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பு appeared first on Sri Lanka Muslim.


Viewing all articles
Browse latest Browse all 101

Trending Articles