றபீக் ஜலீல்
சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்த எமது ஏறாவூர் சகோதர்களுக்கான ஒரு இன்பகரமான போட்டி நிகழ்வும் மற்றும் ஒன்று கூடலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2017-03-03 ம் திகதியன்று பிற்பகல் 1.30 மணி தொடக்கம் 5.30 மணி வரை Old airport parkல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பின்வரும் சுவாரஸ்யமான போட்டிநிகழ்ச்சிகளும், மற்றும் வெற்றி பெறுவோருக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட இருப்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம் .
நடைபெறவிருக்கும் போட்டிநிகழ்வுகள்.
——————————————————
1) தலையணை சமர்.
2) பனிஸ் தின்னுதல்.
3) சாக்கோட்டம்.
4) கயிறு இழுத்தல் .
5) சட்டி உடைத்தல்.
6) யானைக்கு கண் வைத்தல்.
7) பலூன் உடைத்தல்.
8) விநோத உடை போட்டி.
இன்னும் பல இன்பகரமான நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
தனது சொந்த பந்தங்களை , ஊரை, நாட்டைப் பிரிந்து வாழும் எமது ஏறாவூர் சொந்தங்களை மகிழ்விக்கும் நோக்குடனேயே இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதினால் அனைத்து கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம் .
**பதிவுகளுக்கும், இடம் தொடர்பான தகவல்களுக்கும் பின்வரும் இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.
சகோ. நளீம் – 55314125
சகோ. சாதிக் – 55570484
சகோ. இர்ஷாத் -70010633
ஏற்பாடு : Eravur Association of Qatar – EAQ
The post கத்தார்வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான ஒரு திறந்த அழைப்பிதழ் appeared first on Sri Lanka Muslim.