கத்தார் வாழ் யாழ் முஸ்லிம் சகோதரர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலும் உதைப்பந்தாட்ட போட்டியும் நேற்று Qatar Foundation மைதானத்தில் மாலை 4:30 மணியளவில் ஆரம்பமானது. இரு குழுக்களாக நடைபெற்ற நட்புறவுப்போட்டியில் வயதேல்லையின்றி 40 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இளம் வீரர்கள் என பலர் பங்குபற்றினர்.
கத்தாரில் தொழில் புரியும் யாழ் மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட சுமார் 30ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஜன்சீர் மற்றும் அஜ்மல் ஆகியோரின் அணிகளே இப்போட்டியில் களமிறங்கியது. 30 நிமிடங்கள் கொண்ட இப்போட்டியில் முதல் 15 நிமிட முடிவில் ஜன்சீர் அணியினர் 3-1 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தனர். பின்னர் இறுதி 15 நிமிட முடிவில் மேலும் 2 கோல்களை அடித்து ஜன்சீர் அணியினர் 5-1 என்ற அடிப்படையில் போட்டியை நிறைவு செய்தனர்.
இதன்பொது கருத்து தெரிவித்த வெற்றி அடைந்தா அணியின் தலைவர் : இப்போட்டி நட்புறவு போட்டியாகவே நடைபெற்றது இதில் வெற்றி தோல்வி என்ற ஒன்று கிடையாது எனவும் இப்போட்டி நடாத்தப்பட்டமைக்கு முக்கிய காரணம் கத்தார் வாழ் யாழ் முஸ்லிம்களை ஒன்றுசேர்ப்பதற்காகவே இப்போட்டியை தாங்கள் ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்
The post கத்தார் வாழ் யாழ் முஸ்லிம் சகோதரர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலும் உதைப்பந்தாட்ட போட்டியும் appeared first on Sri Lanka Muslim.