Quantcast
Channel: கட்டார் – Sri Lanka Muslim
Viewing all articles
Browse latest Browse all 101

கட்டார் மன்னர் குடும்பத்தின் சொத்து விபரம் இணையத்தில் கசிவு; அதிர்ச்சியில் அதிகாரிகள்

$
0
0

கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை அல் ஜெசீரா உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கட்டாரின் தேசிய வங்கியின் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து இணையம் மூலமாக இந்த தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தரவுப் பட்டியலில் குறித்த வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகளும் காணப்படுவதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார் தேசிய வங்கியின் உள்ளக ஆவணங்கள், கோப்புக்கள் மற்றும் முக்கிய நிதித் தகவல்கள் என்பவை உள்ளடங்கலாக 1.5 ஜிகாபைட்ஸ் தரவுகள் இணைய ஊடுருவிகளால் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.தம் வங்கித் தகவல்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளமையை கட்டார் தேசிய வங்கியும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் குறித்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

The post கட்டார் மன்னர் குடும்பத்தின் சொத்து விபரம் இணையத்தில் கசிவு; அதிர்ச்சியில் அதிகாரிகள் appeared first on Sri Lanka Muslim.


Viewing all articles
Browse latest Browse all 101

Trending Articles